skip to main content

தைப்பூசம்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பான வைபவங்களில் தைப்பூசத் திருவிழா முக்கிய இடம் வகிக்கின்றது . தை மாதம் என்றாலே தமிழர்களுக்கு விழா விருந்தாகவே இருக்கும் .

10- வது நாள் கொண்டாடப்படும் இப்பெருவிழாவில் அம்பாள் காலை சுமார் 7.31 மணிக்குமேல் 8.31 மணிக்குள் கண்ணாடி பல்லக்கில் பவனி வருகிறாள் .

சீர்பெறும் நிகழ்ச்சி

இரவு 10.00 மணியளவில் சமயபுரம் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலிருந்து சீர் மரியாதை பெறும் நிகழ்வு அங்குள்ள ஆஸ்தான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது . அன்று நள்ளிரவு 1.00 மணி முதல் 3.00 மணி வரை அம்மனுக்கு மஹா அபிஷேகமும் பூஜைகளும் நடைபெறுகிறது

தேர்த் திருவிழா

பொதுவாக தேர்த்திருவிழா என்பது பிரம்மோத்சவத்தைக் குறிக்கும் . இப்பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும் . இதனை இன்பத்திருவிழா என்றே கூறலாம் . இவ்விழாவில் கொடியேற்று விழா , வாகனாதி விழா , தேர்விழா மற்றும் தீர்த்தவிழா முதலிய முக்கிய திருவிழாக்கள் இத்தருணத்தில் நடைபெறும் . இவ்விழாக்கள் ஒவ்வொன்றும் இறைவன் , இறைவியின் ஐந்தொழில்களைக் கொண்ட தத்துவத்தை உணர்த்துவதாகும் .

பூச்சொரிதல் திருவிழா

மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் இவ்விழா தமிழகத்தின் வேறு எங்கும் நிகழாத விமரிசையான பெருவிழாவாகும் . இந்நாளில் காலை திருக்கோயில் பார்வதி மண்டபத்திலிருந்து திருக்கோயில் இணைஆணையர் / செயல் அலுவலர் , அர்ச்சகர்கள் , திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தகோடிகள் அனைவரும் புஷ்ப கூடையுடன் திருவீதி உலா வருகின்றனர்

பச்சைப் பட்டினி விரதம்

அன்னை இத்திருத்தலத்தில் பதம்மாறி சிவபதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்புத்திருவுருவமாக சுகாசனத்தில் ஆயிரம்கோடி சூர்யபிரகாசத்துடன் தங்க திருமுடிக்கொண்டு குங்குமநிறமேனியாய் , வைர ஆபரணங்களுடன் சூர்ய சந்திரனைப் போல ஜொலித்து கண்களில் அருள் ஒளி பாவித்து கருணை முகமாய் , அன்னைக்கு அன்னையாய் , ஆதிமுதல் ஆதார சக்தியாய்