skip to main content

mUs;kpF khhpak;kd; jpUf;Nfhtpy; rkaGuk;

      அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலின் கருவறையில் மூலவராக அம்பாள் வீற்றிருப்பது வழக்கமானதாக இருப்பினும் மற்றக் கோயில்களைவிட இங்கு மாறுபட்ட வடிவம் கொண்டு அன்னை அருளாட்சி வழங்குகிறாள் . மூலவரின் திருவுருவம் மரத்தாலும் அதன்மேல் சுதை வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் புதுமையான ஒன்றாகும் . 10 ஆண்டிற்கு ஒருமுறை இதனை மறுசீரமைப்பு செய்வர் .

      கருவறையில் அம்பாள் மகமாயி அமர்ந்த நிலையில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறாள் . அம்பாள் எழுந்தருளியிருக்கும் இடம் முதன்மை பீடமாகும் . அன்னையின் தலைக்கு மேலே ஐந்துதலை நாகம் குடையாக விளங்குவது சிறப்பாகும்

தங்கஜடாமகுடத்துடன் குங்கும் மேனி நிறத்தில் நெற்றியில் அழகிய வைரப்பட்டைகள் மின்ன கண்களில் அருளொளி வீச வைரக்கம்மல்களுடன் மூக்குத்தியும் சூரியன் சந்திரன் போல பேரொளிவீச காட்சி தரும் மகா அன்னையின் அற்புத திருக்கோலத்தினை மானுடனால் வர்ணிக்க இயலாது . அம்மனைக் காணும்பொழுது பக்திப் பரவசத்தால் நாம் வியந்து நிற்போம் . ஆதிசக்தியான அம்மன் தனது எட்டுக் கைகளில் இடப்புறமாக கபாலம் மணி வில் பாசம் வலப்புறமாக கத்தி சூலம் அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களை தாங்கியுள்ளாள் . இடது காலை மடக்கி வலது காலை தொங்கிய நிலையில் சுகாசனத்தில் அமர்ந்து பக்தர்களின் குறைகளை நீக்கி அருள்வழங்கி கொண்டுள்ளாள்